• Oct 31 2026

ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப இலக்கிய அரங்குகள் அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர்

Ziya / Oct 31st 2026, 4:56 pm
image

மனித மனத்தின் நுட்பங்கள், உறவுகளின் சிக்கல்கள், ஆட்சியின் பொறுப்புகள் மற்றும் அறத்தின் வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்து, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலக்கிய அரங்குகள் இன்றியமையாதவை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.   


அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்வான 'திருநாள் மங்கலம்' நிகழ்வு இன்று (30.10.2026) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள துர்க்கா மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றி உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   


நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், 


"கம்பன் தனது காப்பியத்தில் இராம கதையை எடுத்துரைத்தவர் மட்டுமல்ல, மனித மனத்தின் நுட்பங்களையும், உறவுகளின் சிக்கல்களையும், ஆட்சியின் பொறுப்பையும், அறத்தின் வலிமையையும், அன்பின் ஆழத்தையும் தமிழின் செழுமையான கற்பனை மொழியில் வெளிப்படுத்தியவர். ஒரு நல்ல இலக்கியப் படைப்பு எம்மைச் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம், சில நேரங்களில் எம்மை எமக்கே காட்டலாம். மற்றவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்ளவும், ஒரு பிரச்சனையை இன்னொருவரின் பார்வையிலிருந்து பார்க்கவும் இலக்கியம் உதவுகிறது. இலக்கியம் மனிதனுக்கு வழியைக் கற்றுக்கொடுக்கிறது; அதைவிட முக்கியமாக மனிதனைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது" எனத் தெரிவித்தார்.   


"தகவல்கள் வேகமாகப் பரவும் இன்றைய சமூகச் சூழலில், கருத்து முரண்பாடுகள் உடனடியாக மோதல்களாக மாறுகின்றன. மற்றவர்களின் கருத்தைக் கேட்பதற்கும் பொறுமையாகச் சிந்திப்பதற்கும் நாம் நேரம் ஒதுக்காமல் போகின்றோம். இத்தகைய சூழலில் இலக்கிய அரங்குகள் எமக்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன், இன்றைய இளம் தலைமுறையினரிடம் இலக்கிய ஆர்வத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் வாசிப்பதில்லை என்று கூறுவதுடன் நின்றுவிட முடியாது; அவர்களிடம் எவ்வாறு வாசிப்பைக் கொண்டு செல்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். கம்பன் போன்ற பெரும் படைப்பாளர்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதற்குப் பாரம்பரிய அரங்குகள் அவசியம். அதேபோன்று இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறந்த உரைகளைப் பதிவுசெய்து, உலகெங்கும் பரந்துவாழும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.   


இந்நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடக்கவுரையாற்றினார். சிறப்புப் பேச்சாளர்களாகத் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மரபின்மைந்தன் முத்தையா, புலவர் இரெ.சண்முகவடிவேல் ஆகியோருடன், உள்நாட்டு அறிஞர்களான சி.கேசவன், ந.விஜயசுந்தரம், ஆறு.திருமுருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை கம்பன் கழகத் தலைவர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், பேராசிரியர் சிவலிங்கராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் ஜெயசீலன், கரைச்சிப் பிரதேச செயலர் த. முகுந்தன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப இலக்கிய அரங்குகள் அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் மனித மனத்தின் நுட்பங்கள், உறவுகளின் சிக்கல்கள், ஆட்சியின் பொறுப்புகள் மற்றும் அறத்தின் வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்து, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலக்கிய அரங்குகள் இன்றியமையாதவை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.   அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்வான 'திருநாள் மங்கலம்' நிகழ்வு இன்று (30.10.2026) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள துர்க்கா மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றி உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், "கம்பன் தனது காப்பியத்தில் இராம கதையை எடுத்துரைத்தவர் மட்டுமல்ல, மனித மனத்தின் நுட்பங்களையும், உறவுகளின் சிக்கல்களையும், ஆட்சியின் பொறுப்பையும், அறத்தின் வலிமையையும், அன்பின் ஆழத்தையும் தமிழின் செழுமையான கற்பனை மொழியில் வெளிப்படுத்தியவர். ஒரு நல்ல இலக்கியப் படைப்பு எம்மைச் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம், சில நேரங்களில் எம்மை எமக்கே காட்டலாம். மற்றவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்ளவும், ஒரு பிரச்சனையை இன்னொருவரின் பார்வையிலிருந்து பார்க்கவும் இலக்கியம் உதவுகிறது. இலக்கியம் மனிதனுக்கு வழியைக் கற்றுக்கொடுக்கிறது; அதைவிட முக்கியமாக மனிதனைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது" எனத் தெரிவித்தார்.   "தகவல்கள் வேகமாகப் பரவும் இன்றைய சமூகச் சூழலில், கருத்து முரண்பாடுகள் உடனடியாக மோதல்களாக மாறுகின்றன. மற்றவர்களின் கருத்தைக் கேட்பதற்கும் பொறுமையாகச் சிந்திப்பதற்கும் நாம் நேரம் ஒதுக்காமல் போகின்றோம். இத்தகைய சூழலில் இலக்கிய அரங்குகள் எமக்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன், இன்றைய இளம் தலைமுறையினரிடம் இலக்கிய ஆர்வத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் வாசிப்பதில்லை என்று கூறுவதுடன் நின்றுவிட முடியாது; அவர்களிடம் எவ்வாறு வாசிப்பைக் கொண்டு செல்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். கம்பன் போன்ற பெரும் படைப்பாளர்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதற்குப் பாரம்பரிய அரங்குகள் அவசியம். அதேபோன்று இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறந்த உரைகளைப் பதிவுசெய்து, உலகெங்கும் பரந்துவாழும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.   இந்நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடக்கவுரையாற்றினார். சிறப்புப் பேச்சாளர்களாகத் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மரபின்மைந்தன் முத்தையா, புலவர் இரெ.சண்முகவடிவேல் ஆகியோருடன், உள்நாட்டு அறிஞர்களான சி.கேசவன், ந.விஜயசுந்தரம், ஆறு.திருமுருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை கம்பன் கழகத் தலைவர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், பேராசிரியர் சிவலிங்கராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் ஜெயசீலன், கரைச்சிப் பிரதேச செயலர் த. முகுந்தன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement