• Oct 30 2026

வீடுகளில்கூட நிம்மதியில்லை! திருகோணமலை மக்களை அச்சுறுத்துவது என்ன?

Chithra / Oct 30th 2026, 12:31 pm
image


திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் ஊருக்குள் நுழையும் குரங்குகள், வீடுகளில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


வீட்டு உபகரணங்கள், நீர் இணைப்புகள் என்பவற்றைச் சேதப்படுத்துவதுடன், மரங்களிலுள்ள பழங்களையும் குரங்குகள் சாப்பிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.


ஆனால், மக்களின் மிகப்பெரிய கவலை இதுமட்டுமல்ல.


குரங்குகளின் அட்டகாசத்தால் சிறுவர்களைக்கூட வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


எனவே, குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய மாற்று நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தோப்பூர் பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகளில்கூட நிம்மதியில்லை திருகோணமலை மக்களை அச்சுறுத்துவது என்ன திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் ஊருக்குள் நுழையும் குரங்குகள், வீடுகளில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.வீட்டு உபகரணங்கள், நீர் இணைப்புகள் என்பவற்றைச் சேதப்படுத்துவதுடன், மரங்களிலுள்ள பழங்களையும் குரங்குகள் சாப்பிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.ஆனால், மக்களின் மிகப்பெரிய கவலை இதுமட்டுமல்ல.குரங்குகளின் அட்டகாசத்தால் சிறுவர்களைக்கூட வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.எனவே, குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய மாற்று நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தோப்பூர் பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement