முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித்த ராஜபக்சவிற்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றவியல் நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைள் அடிப்படையில் இந்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, வங்கி கணக்குகளை இடைநிறுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதத்தை கையளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.
எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை பணத்தை ஈட்டியுள்ளதாகவும், பாதாள உலகக் குழுத் தலைவர்களுடன் தொடர்பு பேணியதாகவும் ரகித மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ராஜபக்சவின் மகனைத் தேடி வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித்த ராஜபக்சவிற்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.குற்றவியல் நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைள் அடிப்படையில் இந்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, வங்கி கணக்குகளை இடைநிறுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதத்தை கையளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை பணத்தை ஈட்டியுள்ளதாகவும், பாதாள உலகக் குழுத் தலைவர்களுடன் தொடர்பு பேணியதாகவும் ரகித மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.