• Oct 30 2026

இலங்கையை நோக்கி வரும் புதிய விமான சேவை – சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

Chithra / Oct 30th 2026, 10:48 am
image


உஸ்பெகிஸ்தானை தளமாகக் கொண்ட சென்ட்ரம் எயார் (Centrum Air)  நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் மூலம் இலங்கைக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையில் புதிய வான்வழித் தொடர்பு உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனூடாக நாட்டின் சுற்றுலாத் துறையும் ஒரு புதிய பாதைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.


இந்த விமான சேவை 2026 - 2027ஆம் ஆண்டிற்கான சுற்றுலாப் பருவத்திற்காக வாரத்திற்கு இருமுறை, அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இலங்கையை நோக்கி வரும் புதிய விமான சேவை – சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு உஸ்பெகிஸ்தானை தளமாகக் கொண்ட சென்ட்ரம் எயார் (Centrum Air)  நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் மூலம் இலங்கைக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையில் புதிய வான்வழித் தொடர்பு உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனூடாக நாட்டின் சுற்றுலாத் துறையும் ஒரு புதிய பாதைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.இந்த விமான சேவை 2026 - 2027ஆம் ஆண்டிற்கான சுற்றுலாப் பருவத்திற்காக வாரத்திற்கு இருமுறை, அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement