• Oct 31 2026

மின்கம்பத்தில் மோதி தலைகீழாகப் புரண்ட கார் - மூவருக்கு நேர்ந்த நிலை!

Chithra / Oct 30th 2026, 12:39 pm
image


மொணராகலையில் பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.


மொணராகலை – பொத்துவில் பிரதான வீதியின் தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒப்பெகொட பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


வீதியை விட்டு விலகிய கார், மின்சாரக் கம்பத்துடன் மோதி தலைகீழாகப் புரண்டுள்ளது.


இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்த மூவரும் மொணராகலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்கம்பத்தில் மோதி தலைகீழாகப் புரண்ட கார் - மூவருக்கு நேர்ந்த நிலை மொணராகலையில் பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.மொணராகலை – பொத்துவில் பிரதான வீதியின் தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒப்பெகொட பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வீதியை விட்டு விலகிய கார், மின்சாரக் கம்பத்துடன் மோதி தலைகீழாகப் புரண்டுள்ளது.இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த மூவரும் மொணராகலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement