மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (30) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தலைநகர் கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (30) அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு, தலைநகர் கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.அந்தவகையில், கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.