இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான அட்டைகள் மற்றும் இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாட்டில் 65 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்துள்ள பலருக்கு நிரந்தர அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாகத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் புதிய அச்சு இயந்திரங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றதும் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திணைக்களத்தின் திறன் தற்போதைய அளவைவிட இருமடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழமையான நடைமுறையின் கீழ் வழங்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் பிளாஸ்டிக் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், புதிதாக தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அவற்றை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கையில் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, கடந்த 2017ஆம் ஆண்டு பிளாஸ்டிக் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
உற்பத்திச் செலவைக் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அடையாள அட்டைகளில், 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள எண் இடம்பெற்றுள்ளது.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பிளாஸ்டிக் அட்டைகளுக்கான தட்டுப்பாடு காரணமாக, அடையாள அட்டைகளை அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகள் நிலுவையில் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விண்ணப்பதாரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை பெறக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான அட்டைகள் மற்றும் இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாட்டில் 65 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்துள்ள பலருக்கு நிரந்தர அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாகத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் புதிய அச்சு இயந்திரங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.புதிய இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றதும் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திணைக்களத்தின் திறன் தற்போதைய அளவைவிட இருமடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழமையான நடைமுறையின் கீழ் வழங்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நாட்டில் பிளாஸ்டிக் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால், புதிதாக தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அவற்றை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.இலங்கையில் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, கடந்த 2017ஆம் ஆண்டு பிளாஸ்டிக் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.உற்பத்திச் செலவைக் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அடையாள அட்டைகளில், 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள எண் இடம்பெற்றுள்ளது.எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பிளாஸ்டிக் அட்டைகளுக்கான தட்டுப்பாடு காரணமாக, அடையாள அட்டைகளை அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகள் நிலுவையில் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விண்ணப்பதாரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.