• Oct 30 2026

இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினருக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Aathira / Oct 30th 2026, 7:12 am
image

வவுனியாவில் இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினருக்கான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கருத்தரங்கானது,  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை, இந்து கற்கைகள் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரமணராஜா மற்றும் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள வளவாளர் சைவப்புலவர், சைவப் பண்டிதர் யோ.கஜேந்திரா ஆகியோரால் நடாத்தப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி பா.தேவரதன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சிரேஸ்ட மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன், 

வவுனியா மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புஷ்பமாலினி சந்திரமோகன்சர்மா, குருமன்காடு விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு  சிவஸ்ரீ சி.திவாகரக்குருக்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் ஆலயங்களின் ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினருக்கான வழிகாட்டல் கருத்தரங்கு வவுனியாவில் இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினருக்கான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றிருந்தது.குறித்த கருத்தரங்கானது,  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இக்கருத்தரங்கிற்கு வளவாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை, இந்து கற்கைகள் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரமணராஜா மற்றும் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள வளவாளர் சைவப்புலவர், சைவப் பண்டிதர் யோ.கஜேந்திரா ஆகியோரால் நடாத்தப்பட்டிருந்தது.வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி பா.தேவரதன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சிரேஸ்ட மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன், வவுனியா மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புஷ்பமாலினி சந்திரமோகன்சர்மா, குருமன்காடு விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு  சிவஸ்ரீ சி.திவாகரக்குருக்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் ஆலயங்களின் ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement