• Oct 30 2026

பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீதிக்கு வந்தது ஏன்? வவுனியாவில் பரபரப்பு!

Chithra / Oct 30th 2026, 3:20 pm
image


பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரிச்சுமையைக் குறைத்தல், விசேட தெரிவுக்கான கொடுப்பனவுகள், மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக பயணக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் அனுமதிப்பதில் நிலவும் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீதிக்கு வந்தது ஏன் வவுனியாவில் பரபரப்பு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரிச்சுமையைக் குறைத்தல், விசேட தெரிவுக்கான கொடுப்பனவுகள், மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக பயணக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் அனுமதிப்பதில் நிலவும் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement