வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள, வவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சொந்தமான அரச விடுதி வளாகத்தில் அதிகளவிலான டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மலேரியா தடை இயக்கத்தினாரால் நகர் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனை நடவடிக்கையின் போதே, குறித்த விடுதி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்கிக் கிடந்த பாத்திரங்கள், கைவிடப்பட்ட பொருட்கள் மற்றும் பராமரிக்கப்படாத வடிகான்களில் டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களின் குடம்பிகள் பெருமளவில் பெருகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேண வேண்டிய அரச நிறுவனப் பகுதி ஒன்றிலேயே இத்தகைய அலட்சியப்போக்குக் காணப்படுவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு பரவல் அச்சுறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில், குறித்த அரச விடுதி வளாகத்தைச் சீரமைத்து, நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழித்து சுகாதார நடைமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலக அரச விடுதி வளாகத்தில் அதிகளவான டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள, வவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சொந்தமான அரச விடுதி வளாகத்தில் அதிகளவிலான டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.மலேரியா தடை இயக்கத்தினாரால் நகர் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனை நடவடிக்கையின் போதே, குறித்த விடுதி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்கிக் கிடந்த பாத்திரங்கள், கைவிடப்பட்ட பொருட்கள் மற்றும் பராமரிக்கப்படாத வடிகான்களில் டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களின் குடம்பிகள் பெருமளவில் பெருகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேண வேண்டிய அரச நிறுவனப் பகுதி ஒன்றிலேயே இத்தகைய அலட்சியப்போக்குக் காணப்படுவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.டெங்கு பரவல் அச்சுறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில், குறித்த அரச விடுதி வளாகத்தைச் சீரமைத்து, நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழித்து சுகாதார நடைமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.