• Nov 04 2026

போர்க்களமான நாடாளுமன்றம்! எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டத்தால் பெரும் அமளி

Chithra / Nov 3rd 2026, 2:16 pm
image



நாடாளுமன்றத்தில் இன்று (03) எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதி சபாநாயகருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து பதற்றமான சூழல் உருவானது.


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான பல விடயங்களை உடனடியாகச் சபையில் எழுப்புவதற்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அனுமதி மறுத்தமையே இந்தப் பதற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.


எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர், இன்று காலை 9 மணிக்குப் பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.


குறித்த ஆவணங்கள் இன்னும் முழுமையாக ஆராயப்படாததால், அவற்றை உடனடியாகச் சபையில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.


இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்ற உரிமைகளையும் ஜனநாயகக் கொள்கைகளையும் மீறும் செயலாகும் எனக் கவலை வெளியிட்டார்.


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் தயாரிக்கப்பட்டு, 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி நாடாளுமன்றப் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


குறித்த தீர்மானம் ஒக்டோபர் 12ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் தீர்மானத்தைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


அத்துடன், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை நடத்த மறுத்தமை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலாகுமா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சபை நடுவே வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து, பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதி சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சபைக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, முன்வைக்கப்பட்டுள்ள சிறப்புரிமைப் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, இன்றைய தினமே அவற்றுக்குப் பதிலளிக்கப்படும் என உறுதியளித்தார்.

போர்க்களமான நாடாளுமன்றம் எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டத்தால் பெரும் அமளி நாடாளுமன்றத்தில் இன்று (03) எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதி சபாநாயகருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து பதற்றமான சூழல் உருவானது.சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான பல விடயங்களை உடனடியாகச் சபையில் எழுப்புவதற்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அனுமதி மறுத்தமையே இந்தப் பதற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர், இன்று காலை 9 மணிக்குப் பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.குறித்த ஆவணங்கள் இன்னும் முழுமையாக ஆராயப்படாததால், அவற்றை உடனடியாகச் சபையில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்ற உரிமைகளையும் ஜனநாயகக் கொள்கைகளையும் மீறும் செயலாகும் எனக் கவலை வெளியிட்டார்.சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் தயாரிக்கப்பட்டு, 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி நாடாளுமன்றப் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.குறித்த தீர்மானம் ஒக்டோபர் 12ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் தீர்மானத்தைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அத்துடன், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை நடத்த மறுத்தமை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலாகுமா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சபை நடுவே வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதி சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சபைக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, முன்வைக்கப்பட்டுள்ள சிறப்புரிமைப் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, இன்றைய தினமே அவற்றுக்குப் பதிலளிக்கப்படும் என உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement