• Nov 06 2026

யாழில் தனிநபர் ஆக்கிரமித்த 40 பரப்பு அரச காணி..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Chithra / Nov 3rd 2026, 2:21 pm
image


யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணி, தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் மீட்கப்பட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீரேந்து பிரதேசத்திலேயே குறித்த காணி அமைந்துள்ளது.


சுமார் 40 பரப்பு நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் காணியைத் தனிநபர் ஒருவர் அடாத்தாகக் கையகப்படுத்தி, அதனைச் சுற்றி எல்லை வேலிகளையும் அமைத்திருந்தார்.


இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.


விசாரணைகளின் அடிப்படையில், குறித்த காணி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதனைத் திணைக்களத்திடம் மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதற்கமைய, இன்று (03) செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பதிவாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், நெல்லியடி பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காணியை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளித்தனர்.


இதனையடுத்து, காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எல்லை வேலிகளை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.


இதேவேளை, தற்போது காணியை உரிமை கோரிய நபருக்கு, வேறொரு நபரே குறித்த காணியை விற்பனை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.


யாழ்ப்பாணத்தில் அரச காணிகள், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீரேந்து பிரதேசங்கள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத காணிகள் உள்ளிட்டவற்றுக்குப் போலி உறுதிகள் தயாரித்து காணி மோசடிகளில் ஈடுபடும் வலையமைப்பொன்று செயற்படுவதாகப் பொலிஸார் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தனிநபர் ஆக்கிரமித்த 40 பரப்பு அரச காணி. நீதிமன்றம் அதிரடி உத்தரவு யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணி, தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் மீட்கப்பட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீரேந்து பிரதேசத்திலேயே குறித்த காணி அமைந்துள்ளது.சுமார் 40 பரப்பு நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் காணியைத் தனிநபர் ஒருவர் அடாத்தாகக் கையகப்படுத்தி, அதனைச் சுற்றி எல்லை வேலிகளையும் அமைத்திருந்தார்.இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.விசாரணைகளின் அடிப்படையில், குறித்த காணி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதனைத் திணைக்களத்திடம் மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கமைய, இன்று (03) செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பதிவாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், நெல்லியடி பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காணியை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளித்தனர்.இதனையடுத்து, காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எல்லை வேலிகளை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.இதேவேளை, தற்போது காணியை உரிமை கோரிய நபருக்கு, வேறொரு நபரே குறித்த காணியை விற்பனை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.யாழ்ப்பாணத்தில் அரச காணிகள், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீரேந்து பிரதேசங்கள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத காணிகள் உள்ளிட்டவற்றுக்குப் போலி உறுதிகள் தயாரித்து காணி மோசடிகளில் ஈடுபடும் வலையமைப்பொன்று செயற்படுவதாகப் பொலிஸார் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement