• Nov 04 2026

யாழ். உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரை அபாயம்!

Chithra / Nov 3rd 2026, 3:28 pm
image


இலங்கையின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 1.00 மணி முதல் அமுலாகும் வகையில், கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் (Amber)  எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


இதற்கமைய, அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பதுளை, கண்டி, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று பிற்பகல் 12.49 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (04) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


கடுமையான மின்னல் தாக்கத்தினால் உட்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதுடன், வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் வீடுகள் உள்ளிட்ட பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும், கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள், மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் மற்றும் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


அதேவேளை, முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அவசர நிலைமைகளின் போது அருகிலுள்ள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரை அபாயம் இலங்கையின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 1.00 மணி முதல் அமுலாகும் வகையில், கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் (Amber)  எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இதற்கமைய, அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், பதுளை, கண்டி, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 12.49 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (04) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கடுமையான மின்னல் தாக்கத்தினால் உட்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதுடன், வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் வீடுகள் உள்ளிட்ட பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும், கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள், மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் மற்றும் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அதேவேளை, முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அவசர நிலைமைகளின் போது அருகிலுள்ள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement