• Jul 23 2026

ரத்கம விதுரவின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

dorin / Jul 23rd 2026, 6:40 pm
image

ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரே இதனைக் செயற்படுத்தியுள்ளனர். 

குறித்த சொத்துக்கள் ரத்கம விதுரவின் தாயாரின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கமைய, ரத்ம - தேவனிஹொட பகுதியில் 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடிக் கட்டிடம், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலம் மற்றும் அரைகுறையாக முடிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், அதே பகுதியில் உள்ள 12.33 பேர்ச்சஸ் நிலப்பரப்பைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள மேலும் 200 லட்சம் ரூபாய் பெறுமதியான நிலம் ஆகியன முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்குகின்றன.

ரத்கம விதுரவின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரே இதனைக் செயற்படுத்தியுள்ளனர். குறித்த சொத்துக்கள் ரத்கம விதுரவின் தாயாரின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ரத்ம - தேவனிஹொட பகுதியில் 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடிக் கட்டிடம், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலம் மற்றும் அரைகுறையாக முடிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், அதே பகுதியில் உள்ள 12.33 பேர்ச்சஸ் நிலப்பரப்பைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள மேலும் 200 லட்சம் ரூபாய் பெறுமதியான நிலம் ஆகியன முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்குகின்றன.

Advertisement

Advertisement

Advertisement