• Oct 21 2026

பொலிஸாரைத் தாண்டி முப்படையினருக்கும் கைது அதிகாரமா? தொடர்கிறது மனுக்கள் மீதான விசாரணை

Chithra / Oct 21st 2026, 1:32 pm
image


அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 25 மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நேற்று ஆரம்பித்துள்ளது.


நீதித்துறையின் சுதந்திரம், நிறைவேற்று அதிகாரங்களின் வரம்பு மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் மனுதாரர்கள் இதன்போது கவலைகளை முன்வைத்துள்ளனர்.


பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரம் பாதிக்கப்படக்கூடும் என வாதிட்டுள்ளார்.


சட்டமா அதிபரின் அனுமதியின்றி சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான நீதவான்களின் அதிகாரத்தை இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் தடுத்து வைக்கும் உத்தரவுகள் தொடர்பான 27 மற்றும் 28 ஆவது சரத்துகள், நீதிமன்ற உத்தரவின்றி ஆட்களை தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


59 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவதால், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆவது உறுப்புரைகள் மீறப்படக்கூடும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.


கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறையினருக்கு மாத்திரமன்றி முப்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினருக்கும் விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் இன்றும் தொடரவுள்ளன.


பொலிஸாரைத் தாண்டி முப்படையினருக்கும் கைது அதிகாரமா தொடர்கிறது மனுக்கள் மீதான விசாரணை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 25 மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நேற்று ஆரம்பித்துள்ளது.நீதித்துறையின் சுதந்திரம், நிறைவேற்று அதிகாரங்களின் வரம்பு மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் மனுதாரர்கள் இதன்போது கவலைகளை முன்வைத்துள்ளனர்.பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரம் பாதிக்கப்படக்கூடும் என வாதிட்டுள்ளார்.சட்டமா அதிபரின் அனுமதியின்றி சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான நீதவான்களின் அதிகாரத்தை இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் தடுத்து வைக்கும் உத்தரவுகள் தொடர்பான 27 மற்றும் 28 ஆவது சரத்துகள், நீதிமன்ற உத்தரவின்றி ஆட்களை தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.59 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவதால், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆவது உறுப்புரைகள் மீறப்படக்கூடும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறையினருக்கு மாத்திரமன்றி முப்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினருக்கும் விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் இன்றும் தொடரவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement