இலங்கையில் நீளமாகத் தலைமுடி வளர்ப்பவர்களும் உடலில் பச்சைக்குத்திக் கொண்டவர்களும் புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்களா?
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்தத் தகவல் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (20) பாராளுமன்றத்தில் முக்கிய விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துவரும் பாதாள உலகக் குற்றங்கள், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால், இந்தச் சட்டமூலத்தின் 4(2) ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக, குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களின் ஆடைகள், சைகைகள் மற்றும் தனித்துவமான அடையாளக் குறியீடுகள் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே தலைமுடி வளர்ப்பவர்களும் பச்சைக்குத்திக் கொண்டவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் பரவியுள்ளன.
இந்நிலையில்தான் நீதியமைச்சர் முக்கியமான விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் செயற்படும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களுக்கென தனித்துவமான ஆடைகள், சைகைகள் மற்றும் அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துவது வழக்கமாகும்.
அவ்வாறான அடையாளங்கள் இலங்கையிலும் காணப்படும் சந்தர்ப்பங்களில், அவை நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படக்கூடிய காரணிகளில் ஒன்றாக அமையலாம்.
அதாவது, தலைமுடியை நீளமாக வளர்ப்பதோ அல்லது உடலில் பச்சைக்குத்திக் கொள்வதோ ஒருவரைக் குற்றவாளியாகக் கருதுவதற்கான காரணமாக அமையாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அடையாளங்கள் மாத்திரம் ஒருவரைக் குற்றவாளியாக நிரூபிப்பதற்கான இறுதிச் சாட்சியமாகக் கருதப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சட்ட நடைமுறைகள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்களின் ஆடை, தலைமுடி அலங்காரம் மற்றும் பச்சைக்குத்துதல் போன்ற தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு இந்தச் சட்டமூலத்தால் எந்தத் தடையும் விதிக்கப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.
நாட்டில் புற்றுநோயைப் போன்று பரவிவரும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் சொத்துச் சேதங்கள் போன்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சில அரசியல் தரப்பினர் சட்டமூலத்தைத் திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், சட்டமூலம் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தலைமுடி வளர்த்தாலோ, பச்சைக்குத்தினாலோ சிறையா பரபரப்பை ஏற்படுத்திய புதிய சட்டம் இலங்கையில் நீளமாகத் தலைமுடி வளர்ப்பவர்களும் உடலில் பச்சைக்குத்திக் கொண்டவர்களும் புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்களாசமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்தத் தகவல் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (20) பாராளுமன்றத்தில் முக்கிய விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.நாட்டில் அதிகரித்துவரும் பாதாள உலகக் குற்றங்கள், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆனால், இந்தச் சட்டமூலத்தின் 4(2) ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.குறிப்பாக, குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களின் ஆடைகள், சைகைகள் மற்றும் தனித்துவமான அடையாளக் குறியீடுகள் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்தே தலைமுடி வளர்ப்பவர்களும் பச்சைக்குத்திக் கொண்டவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் பரவியுள்ளன.இந்நிலையில்தான் நீதியமைச்சர் முக்கியமான விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.சர்வதேச அளவில் செயற்படும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களுக்கென தனித்துவமான ஆடைகள், சைகைகள் மற்றும் அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துவது வழக்கமாகும்.அவ்வாறான அடையாளங்கள் இலங்கையிலும் காணப்படும் சந்தர்ப்பங்களில், அவை நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படக்கூடிய காரணிகளில் ஒன்றாக அமையலாம்.அதாவது, தலைமுடியை நீளமாக வளர்ப்பதோ அல்லது உடலில் பச்சைக்குத்திக் கொள்வதோ ஒருவரைக் குற்றவாளியாகக் கருதுவதற்கான காரணமாக அமையாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அத்தகைய அடையாளங்கள் மாத்திரம் ஒருவரைக் குற்றவாளியாக நிரூபிப்பதற்கான இறுதிச் சாட்சியமாகக் கருதப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான சட்ட நடைமுறைகள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும், பொதுமக்களின் ஆடை, தலைமுடி அலங்காரம் மற்றும் பச்சைக்குத்துதல் போன்ற தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு இந்தச் சட்டமூலத்தால் எந்தத் தடையும் விதிக்கப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.நாட்டில் புற்றுநோயைப் போன்று பரவிவரும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் சொத்துச் சேதங்கள் போன்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.சில அரசியல் தரப்பினர் சட்டமூலத்தைத் திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், சட்டமூலம் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.