உஸ்பெகிஸ்தானின் சென்ட்ரம் ஏர் (Centrum Air) விமான நிறுவனம், இலங்கைக்கான புதிய நேரடி விமானச் சேவையை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிலிருந்து இலங்கையின் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த விமானச் சேவைகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி வரை, வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.
இந்த விமானச் சேவைகளுக்காக நவீன வசதிகளைக் கொண்ட ஏர்பஸ் A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய விமானச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், இது இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கும், விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் புதிய சேவை முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புதிய விமானச் சேவைக்கான பயணச்சீட்டுக் கட்டணங்கள் 357.28 அமெரிக்க டொலர்களிலிருந்து ஆரம்பமாகின்றன. இது இலங்கை நாணய மதிப்பில் சுமார் 118,420 ரூபாவாகும்.
மேலும், இந்த விமானச் சேவைக்கான பயணச்சீட்டுகள் சென்ட்ரம் ஏர் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும், App Store மற்றும் Google Play ஆகியவற்றில் கிடைக்கும் நிறுவனத்தின் மொபைல் செயலியிலும் ஏற்கனவே விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வரும் மற்றுமொரு வெளிநாட்டு விமான நிறுவனம் – பயணச்சீட்டு விலை எவ்வளவு உஸ்பெகிஸ்தானின் சென்ட்ரம் ஏர் (Centrum Air) விமான நிறுவனம், இலங்கைக்கான புதிய நேரடி விமானச் சேவையை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.இதன்படி, உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிலிருந்து இலங்கையின் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.குறித்த விமானச் சேவைகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி வரை, வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.இந்த விமானச் சேவைகளுக்காக நவீன வசதிகளைக் கொண்ட ஏர்பஸ் A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிய விமானச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், இது இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கும், விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் புதிய சேவை முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, புதிய விமானச் சேவைக்கான பயணச்சீட்டுக் கட்டணங்கள் 357.28 அமெரிக்க டொலர்களிலிருந்து ஆரம்பமாகின்றன. இது இலங்கை நாணய மதிப்பில் சுமார் 118,420 ரூபாவாகும்.மேலும், இந்த விமானச் சேவைக்கான பயணச்சீட்டுகள் சென்ட்ரம் ஏர் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும், App Store மற்றும் Google Play ஆகியவற்றில் கிடைக்கும் நிறுவனத்தின் மொபைல் செயலியிலும் ஏற்கனவே விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.