• Oct 19 2026

இஷானியா கலாமன்றத்தினால் 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு-முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம்

Ziya / Oct 19th 2026, 5:22 pm
image

இஷானியா கலாமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணிகளின் ஒரு பகுதியாக, 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


தமிழாசிரியர் ஜெயம் ஜெகனின் தலைமையில்  நேற்றையதினம் (18.10.2026) இஷானியா கலாமன்றத்தின் நிறுவுனரும், சமூகதிலகமுமான வை. கமலராஜாவின் சொந்த நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டது.


இஷானியா கலாமன்றம் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூக நலத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. 


அந்தவகையில், மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வீட்டுத்திட்ட உதவிகள், குழாய்க் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல், இடர்காலங்களில் உலருணவுப் பொதிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்குக் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அத்துடன், அன்னதானம் வழங்குதல், மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை நடத்துதல் மற்றும் இளைஞர்களினதும் சிறுவர்களினதும் திறன்களை வளர்க்கும் நோக்கில் நடனம், கராத்தே, சிலம்பம், வயலின், ஓகன் மற்றும் பண்ணிசை போன்ற நுண்கலை வகுப்புகளையும் கலாமன்றம் நடத்தி வருகின்றது.


இவ்வாறான சமூகப் பணிகள் அனைத்தும் கலாமன்றத்தின் நிறுவுனர் வை. கமலராஜாவின் சொந்த நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நலிவுற்ற குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், கல்வி மற்றும் கலைத்துறைகளில் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தல், முதியவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இஷானியா கலாமன்றம் தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஷானியா கலாமன்றத்தினால் 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு-முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம் இஷானியா கலாமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணிகளின் ஒரு பகுதியாக, 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தமிழாசிரியர் ஜெயம் ஜெகனின் தலைமையில்  நேற்றையதினம் (18.10.2026) இஷானியா கலாமன்றத்தின் நிறுவுனரும், சமூகதிலகமுமான வை. கமலராஜாவின் சொந்த நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டது.இஷானியா கலாமன்றம் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூக நலத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வீட்டுத்திட்ட உதவிகள், குழாய்க் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல், இடர்காலங்களில் உலருணவுப் பொதிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்குக் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன், அன்னதானம் வழங்குதல், மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை நடத்துதல் மற்றும் இளைஞர்களினதும் சிறுவர்களினதும் திறன்களை வளர்க்கும் நோக்கில் நடனம், கராத்தே, சிலம்பம், வயலின், ஓகன் மற்றும் பண்ணிசை போன்ற நுண்கலை வகுப்புகளையும் கலாமன்றம் நடத்தி வருகின்றது.இவ்வாறான சமூகப் பணிகள் அனைத்தும் கலாமன்றத்தின் நிறுவுனர் வை. கமலராஜாவின் சொந்த நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நலிவுற்ற குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், கல்வி மற்றும் கலைத்துறைகளில் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தல், முதியவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இஷானியா கலாமன்றம் தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement