• Oct 19 2026

நடுவானில் ஆண் குழந்தையைப் பிரசவித்த இலங்கைப் பெண்! கர்ப்பத்தை மறைத்துப் பயணித்தாரா?

Chithra / Oct 19th 2026, 12:44 pm
image


குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த விமானமொன்றில், இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நடுவானில் ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஜசீரா எயார்வேஸ் (Jazeera Airways) விமானத்திலேயே இன்று (19) திங்கட்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.


குறித்த பெண் கடந்த 2024ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாகக் குவைத் நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இன்று அதிகாலை 2.52 மணியளவில் குவைத் நகரிலிருந்து புறப்பட்ட JN-551 இலக்க விமானத்தில் அவர் பயணித்துள்ளார்.


பிரசவ காலம் நெருங்கிய கர்ப்பிணிப் பெண்களுக்கு விமானப் பயணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், தனது கர்ப்பத்தை விமான சேவை அதிகாரிகளிடமிருந்து மறைப்பதற்காக உடலை இறுக்கமாகப் பிடிக்கும் டெனிம் காற்சட்டையை அவர் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண்ணுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் அவர் விமானத்திற்குள்ளேயே ஆண் குழந்தையொன்றைப் பாதுகாப்பாகப் பிரசவித்துள்ளார்.


சம்பவத்தை அறிந்த விமானி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.


இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக நோயாளர் காவு வண்டிகள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.


பின்னர், தாயும் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையும் மேலதிக மருத்துவப் பராமரிப்புகளுக்காக நீர்கொழும்பு மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடுவானில் பயணித்த விமானத்திற்குள் இலங்கைப் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்த இந்தச் சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடுவானில் ஆண் குழந்தையைப் பிரசவித்த இலங்கைப் பெண் கர்ப்பத்தை மறைத்துப் பயணித்தாரா குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த விமானமொன்றில், இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நடுவானில் ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஜசீரா எயார்வேஸ் (Jazeera Airways) விமானத்திலேயே இன்று (19) திங்கட்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.குறித்த பெண் கடந்த 2024ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாகக் குவைத் நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று அதிகாலை 2.52 மணியளவில் குவைத் நகரிலிருந்து புறப்பட்ட JN-551 இலக்க விமானத்தில் அவர் பயணித்துள்ளார்.பிரசவ காலம் நெருங்கிய கர்ப்பிணிப் பெண்களுக்கு விமானப் பயணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், தனது கர்ப்பத்தை விமான சேவை அதிகாரிகளிடமிருந்து மறைப்பதற்காக உடலை இறுக்கமாகப் பிடிக்கும் டெனிம் காற்சட்டையை அவர் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண்ணுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் அவர் விமானத்திற்குள்ளேயே ஆண் குழந்தையொன்றைப் பாதுகாப்பாகப் பிரசவித்துள்ளார்.சம்பவத்தை அறிந்த விமானி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக நோயாளர் காவு வண்டிகள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.பின்னர், தாயும் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையும் மேலதிக மருத்துவப் பராமரிப்புகளுக்காக நீர்கொழும்பு மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடுவானில் பயணித்த விமானத்திற்குள் இலங்கைப் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்த இந்தச் சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement