• Oct 19 2026

யாழில் பயணத்தின் நடுவே நேர்ந்த விபரீதம் – பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Chithra / Oct 19th 2026, 4:10 pm
image


யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அல்லைப்பிட்டியில் உள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன், அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டி மோதியுள்ளது.


இந்த விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில், அவர்களில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


ஆனால், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


யாழில் பயணத்தின் நடுவே நேர்ந்த விபரீதம் – பெண்ணுக்கு நேர்ந்த சோகம் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அல்லைப்பிட்டியில் உள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன், அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டி மோதியுள்ளது.இந்த விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில், அவர்களில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.ஆனால், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement