அக்குறணை பகுதியில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் 7ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
சீமெந்து கலவை லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பல வாகனங்கள் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த லொறி, முச்சக்கரவண்டிகள், ஏனைய லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் இதில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் ஆரம்பத்தில் நால்வர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐந்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டுவதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கொடிய விபத்தில், சீமெந்து ஏற்றிச் சென்ற லொரியின் சாரதியை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்குறணையை உலுக்கிய மரண ஓலம் அதிகரிக்கும் உயிர்ப்பலி - சாரதி கைது அக்குறணை பகுதியில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் 7ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.சீமெந்து கலவை லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பல வாகனங்கள் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கட்டுப்பாட்டை இழந்த லொறி, முச்சக்கரவண்டிகள், ஏனைய லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் இதில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில் ஆரம்பத்தில் நால்வர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐந்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டுவதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கொடிய விபத்தில், சீமெந்து ஏற்றிச் சென்ற லொரியின் சாரதியை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.