கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்குறணை, குருகொட பகுதியில் 7ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (19) இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று ஏனைய பல வாகனங்களுடனும் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விபத்தைத் தொடர்ந்து கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையை உலுக்கிய கோர விபத்து; பறிபோன உயிர்கள் பலர் படுகாயம் கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அக்குறணை, குருகொட பகுதியில் 7ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (19) இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று ஏனைய பல வாகனங்களுடனும் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, விபத்தைத் தொடர்ந்து கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.