யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழா மாநகர கலைக் கலாச்சாரக்குழுவின் தலைவர் திரு.கிளெமென்ற் மார்ட்டீன் நெல்சன் தலைமையில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 14ம் திகதி இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி வி.மதிவதனி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மாநகர பிரதி முதல்வர் திரு.இ.தயாளன் மற்றும் மாநகர ஆணையாளர் திரு.டெ.அ.அரவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நவராத்திரி விழாவின் கலை நிகழ்வுகளை வண்ணை விஸ்வலிங்க கணபதி ஆலய அறநெறி பாடசாலை மாணவர்கள், அழகியல் கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றியிருந்தனர்.
காத்தவராயன் சிந்து நடை கூத்தினை யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்களம் அரங்க கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.
மேற்படி நிகழ்வில் யாழ் மாநகரசபையின் உறுப்பினர்கள், பொறியியலாளர், பிரதம நூலகர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், உழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நவராத்திரி விழாவில் முதல்வர் மதிவதனி பிரதம விருந்தினராக பங்கேற்பு யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழா மாநகர கலைக் கலாச்சாரக்குழுவின் தலைவர் திரு.கிளெமென்ற் மார்ட்டீன் நெல்சன் தலைமையில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 14ம் திகதி இடம் பெற்றது.மேற்படி நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி வி.மதிவதனி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநகர பிரதி முதல்வர் திரு.இ.தயாளன் மற்றும் மாநகர ஆணையாளர் திரு.டெ.அ.அரவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.நவராத்திரி விழாவின் கலை நிகழ்வுகளை வண்ணை விஸ்வலிங்க கணபதி ஆலய அறநெறி பாடசாலை மாணவர்கள், அழகியல் கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றியிருந்தனர். காத்தவராயன் சிந்து நடை கூத்தினை யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்களம் அரங்க கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.மேற்படி நிகழ்வில் யாழ் மாநகரசபையின் உறுப்பினர்கள், பொறியியலாளர், பிரதம நூலகர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், உழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.