• Oct 21 2026

சேற்றுக்குள் சிக்கி போராடும் உயிர்! காப்பாற்றக் காத்திருக்கும் மக்கள்

Chithra / Oct 21st 2026, 12:00 pm
image


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் வயல்வெளிச் சேற்றுக்குள் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படும் யானையொன்றை உடனடியாக மீட்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் குறித்த யானை சேற்றுக்குள் சரிந்து, உயிருக்குப் போராடும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


யானையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை மருத்துவக் குழுவினரும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


குறிப்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, யானையின் உடல்நிலையை நேரடியாகப் பரிசோதிப்பதுடன், அதனைச் சேற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தேவையான அவசர மருத்துவச் சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சேற்றுக்குள் சிக்கி போராடும் உயிர் காப்பாற்றக் காத்திருக்கும் மக்கள் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் வயல்வெளிச் சேற்றுக்குள் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படும் யானையொன்றை உடனடியாக மீட்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் குறித்த யானை சேற்றுக்குள் சரிந்து, உயிருக்குப் போராடும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.யானையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை மருத்துவக் குழுவினரும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குறிப்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, யானையின் உடல்நிலையை நேரடியாகப் பரிசோதிப்பதுடன், அதனைச் சேற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தேவையான அவசர மருத்துவச் சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement