இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆண் குழந்தை பிறக்கும் எனக் குறி சொன்ன பூசாரி ஒருவரை, பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் தந்தையும் மகனும் இணைந்து சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலையைத் தங்களின் நீண்டகாலப் பகைவர் மீது சுமத்துவதற்காக, கொலை நடந்த இடத்தில் அவரது புகைப்படத்தை வைத்துச் சந்தேகத்தைத் திசைதிருப்ப முயன்றமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள பாரா காலன் கிராமத்தில், சிவன் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த 75 வயதான சுவாமி தேவானந்த் பாரதி, கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி கோயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பூசாரியைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றமைக்கான தகவல்களைப் பெற்றனர்.
கொலை நடந்த இடத்தில் ஹரிந்திரா என்பவரின் புகைப்படம் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து விசாரித்த பொலிஸார், அவருக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹசீம் மற்றும் அவரது மகன் ஜீஷன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
பொலிஸ் விசாரணைகளின்படி, ஜீஷனின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, தம்பதியினர் ஆண் குழந்தையைப் பெற வேண்டும் என விரும்பியுள்ளனர். சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதற்காக மருத்துவமனையை நாட முடியாத நிலையில், கோயில் பூசாரியான தேவானந்த் பாரதியிடம் குறி கேட்டுள்ளனர்.
அப்போது, ஆண் குழந்தை பிறக்கும் எனப் பூசாரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆண் குழந்தைக்குப் பதிலாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தையும் மகனும், பூசாரியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தங்களின் நீண்டகாலப் பகைவரான ஹரிந்திராவைப் பழிவாங்கும் நோக்கில், கொலை நடந்த இடத்தில் அவரது புகைப்படத்தை வைத்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
ஆண் குழந்தை பிறக்கும் எனக் குறி சொன்ன பூசாரி சுட்டுக்கொலை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆண் குழந்தை பிறக்கும் எனக் குறி சொன்ன பூசாரி ஒருவரை, பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் தந்தையும் மகனும் இணைந்து சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்தக் கொலையைத் தங்களின் நீண்டகாலப் பகைவர் மீது சுமத்துவதற்காக, கொலை நடந்த இடத்தில் அவரது புகைப்படத்தை வைத்துச் சந்தேகத்தைத் திசைதிருப்ப முயன்றமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள பாரா காலன் கிராமத்தில், சிவன் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த 75 வயதான சுவாமி தேவானந்த் பாரதி, கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி கோயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பூசாரியைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றமைக்கான தகவல்களைப் பெற்றனர்.கொலை நடந்த இடத்தில் ஹரிந்திரா என்பவரின் புகைப்படம் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து விசாரித்த பொலிஸார், அவருக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் விடுதலை செய்துள்ளனர்.தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹசீம் மற்றும் அவரது மகன் ஜீஷன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.பொலிஸ் விசாரணைகளின்படி, ஜீஷனின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, தம்பதியினர் ஆண் குழந்தையைப் பெற வேண்டும் என விரும்பியுள்ளனர். சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதற்காக மருத்துவமனையை நாட முடியாத நிலையில், கோயில் பூசாரியான தேவானந்த் பாரதியிடம் குறி கேட்டுள்ளனர்.அப்போது, ஆண் குழந்தை பிறக்கும் எனப் பூசாரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆண் குழந்தைக்குப் பதிலாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த தந்தையும் மகனும், பூசாரியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், தங்களின் நீண்டகாலப் பகைவரான ஹரிந்திராவைப் பழிவாங்கும் நோக்கில், கொலை நடந்த இடத்தில் அவரது புகைப்படத்தை வைத்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.