• Oct 21 2026

நாளை அதிகாலை வரை ஆபத்து! 25 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

Chithra / Oct 21st 2026, 1:12 pm
image


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 25 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


இதன்படி, 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 6 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.


மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


இன்று (21) முற்பகல் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (22) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்ப்பதற்குப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வேளைகளில் கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


நாளை அதிகாலை வரை ஆபத்து 25 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 25 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இதன்படி, 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 6 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இன்று (21) முற்பகல் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (22) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்ப்பதற்குப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வேளைகளில் கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement