• Oct 22 2026

சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் 1,454 கைதிகள்! – அரசு என்ன சொல்கிறது?

Chithra / Oct 22nd 2026, 10:51 am
image


நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால், நாடளாவிய ரீதியில் 1,454 தண்டனை பெற்ற கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி  அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


இதன்படி, 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாத நிலையில் 421 கைதிகளும், 15,000 முதல் 25,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாமல் 220 கைதிகளும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


மேலும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாத 361 கைதிகளும், 50,000 முதல் 100,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாத 245 கைதிகளும் சிறைகளில் உள்ளனர்.


அதேவேளை, 100,000 ரூபாய்க்கும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் மேலும் 207 கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், நாட்டின் சிறைச்சாலைகளில் தற்போது 10,611 தண்டனை பெற்ற கைதிகளும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 28,408 கைதிகளும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் மாத்திரம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தெரிவு செய்யப்பட்ட கைதிகளின் அபராதத் தொகையைச் செலுத்தி அவர்களை விடுவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அமைப்புகளும் நிறுவனங்களும் ஏற்கனவே முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் 1,454 கைதிகள் – அரசு என்ன சொல்கிறது நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால், நாடளாவிய ரீதியில் 1,454 தண்டனை பெற்ற கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி  அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.இதன்படி, 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாத நிலையில் 421 கைதிகளும், 15,000 முதல் 25,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாமல் 220 கைதிகளும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாத 361 கைதிகளும், 50,000 முதல் 100,000 ரூபாய் வரையிலான அபராதத்தைச் செலுத்த முடியாத 245 கைதிகளும் சிறைகளில் உள்ளனர்.அதேவேளை, 100,000 ரூபாய்க்கும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் மேலும் 207 கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், நாட்டின் சிறைச்சாலைகளில் தற்போது 10,611 தண்டனை பெற்ற கைதிகளும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 28,408 கைதிகளும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் மாத்திரம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தெரிவு செய்யப்பட்ட கைதிகளின் அபராதத் தொகையைச் செலுத்தி அவர்களை விடுவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அமைப்புகளும் நிறுவனங்களும் ஏற்கனவே முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement