• Oct 22 2026

வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்! கந்தளாய் மக்களின் பரிதாப நிலை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Chithra / Oct 22nd 2026, 11:09 am
image


கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனமழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக பேராறு, முதலாம் குலனி, இரண்டாம் குலனி மற்றும் அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தங்களது உடைமைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


மேலும், வீடுகளில் தொடர்ந்து வெள்ளநீர் தேங்கியுள்ளதால், பாதுகாப்புக் கருதி சில குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, குறித்த பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது நீண்டகாலப் பிரச்சினையாகத் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது தங்களது வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இதுவரை இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் கந்தளாய் மக்களின் பரிதாப நிலை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனமழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக பேராறு, முதலாம் குலனி, இரண்டாம் குலனி மற்றும் அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தங்களது உடைமைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.மேலும், வீடுகளில் தொடர்ந்து வெள்ளநீர் தேங்கியுள்ளதால், பாதுகாப்புக் கருதி சில குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, குறித்த பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது நீண்டகாலப் பிரச்சினையாகத் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது தங்களது வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இதுவரை இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement