• Oct 22 2026

கனமழையால் திறக்கப்படும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் – பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Chithra / Oct 22nd 2026, 11:39 am
image


நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக ராஜாங்கனை, மேல் கொத்மலை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அவற்றிலிருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்ச்சியான கனமழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


இதன் ஊடாக வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறந்த நிலையில் உள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நேற்று பெய்த கனமழையால் இன்று (22) அதிகாலை வரை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் ஒரு வான் கதவு அதிகாலையில் தானாகவே மூடிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடருமானால் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் நீர்த்தேக்க அணைக்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி, வாரியப்பொல, நிகவெரட்டிய, மஹோ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆரச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் வெள்ளப்பெருக்கு மட்டத்தை நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 16,500 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.


மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், எதிர்வரும் மணித்தியாலங்களில் வெளியேற்றப்படும் நீரின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.


இதனால் ஆற்றங்கரையோரங்களிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழையால் திறக்கப்படும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் – பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ராஜாங்கனை, மேல் கொத்மலை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அவற்றிலிருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்ச்சியான கனமழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன் ஊடாக வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறந்த நிலையில் உள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்று பெய்த கனமழையால் இன்று (22) அதிகாலை வரை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் ஒரு வான் கதவு அதிகாலையில் தானாகவே மூடிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடருமானால் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால் நீர்த்தேக்க அணைக்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, வாரியப்பொல, நிகவெரட்டிய, மஹோ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆரச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் வெள்ளப்பெருக்கு மட்டத்தை நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 16,500 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், எதிர்வரும் மணித்தியாலங்களில் வெளியேற்றப்படும் நீரின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.இதனால் ஆற்றங்கரையோரங்களிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement