• Oct 22 2026

மீண்டும் மின்வெட்டா? வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 22nd 2026, 11:26 am
image


நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திப் பணிகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.


இதன் தாக்கத்தால் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்னாக்கி ஒன்றும் செயலிழந்ததுடன், மின்சார உற்பத்திப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், செயலிழந்த மின்னாக்கியை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, நாட்டின் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலதிக மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மின்வெட்டா வெளியான முக்கிய அறிவிப்பு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திப் பணிகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.இதன் தாக்கத்தால் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்னாக்கி ஒன்றும் செயலிழந்ததுடன், மின்சார உற்பத்திப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், செயலிழந்த மின்னாக்கியை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, நாட்டின் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலதிக மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement