• May 30 2026

எரிபொருள் விற்பனையில் நஷ்டம்? கோடிக்கணக்கில் சுமை தாங்கும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்! வெளியான தகவல்

Chithra / May 30th 2026, 10:57 am
image

இலங்கையில் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய அளவிலான கட்டமைப்பு நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தரவுகளின்படி, மானியங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னரே பல எரிபொருள் வகைகளிலும் லிட்டருக்கு அதிகளவான நஷ்டம் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினரால் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையிலேயே கூட்டுத்தாபனம் பெரும் நிதிச் சுமையை தாங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரக எரிபொருளின் இறக்குமதிச் செலவு 273.59 ரூபாயாகவும், அதற்கான வரி 136.58 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் அதன் சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், தற்போது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.


மேலும், பெட்ரோல் 95 ரக எரிபொருளிலும் லிட்டருக்கு 22.46 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் இறக்குமதிச் செலவு 560.85 ரூபாயாகவும், வரி 163.27 ரூபாயாகவும் உள்ள நிலையில் அதன் சூத்திர விலை 749.70 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.


எனினும், அது சந்தையில் 382 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால், ஒவ்வொரு லிட்டர் ஒட்டோ டீசலுக்கும் 367.70 ரூபாய் நஷ்டத்தை கூட்டுத்தாபனம் சந்தித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


சுப்பர் டீசல் விற்பனையில் இந்த நஷ்டம் மேலும் அதிகரித்து, லிட்டருக்கு 397.07 ரூபாயாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேவேளை, எவ்வித வரிகளும் விதிக்கப்படாத மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் இறக்குமதிச் செலவு 550.24 ரூபாயாகவும், அதன் சூத்திர விலை 580.53 ரூபாயாகவும் இருந்த போதிலும், அது நுகர்வோருக்கு 255 ரூபாய்க்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையிலும் 325.53 ரூபாய் நஷ்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டு வருவதாக வலுசக்தி அமைச்சின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் நஷ்டம் கோடிக்கணக்கில் சுமை தாங்கும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியான தகவல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய அளவிலான கட்டமைப்பு நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தரவுகளின்படி, மானியங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னரே பல எரிபொருள் வகைகளிலும் லிட்டருக்கு அதிகளவான நஷ்டம் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினரால் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையிலேயே கூட்டுத்தாபனம் பெரும் நிதிச் சுமையை தாங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரக எரிபொருளின் இறக்குமதிச் செலவு 273.59 ரூபாயாகவும், அதற்கான வரி 136.58 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் அதன் சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், தற்போது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.மேலும், பெட்ரோல் 95 ரக எரிபொருளிலும் லிட்டருக்கு 22.46 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் இறக்குமதிச் செலவு 560.85 ரூபாயாகவும், வரி 163.27 ரூபாயாகவும் உள்ள நிலையில் அதன் சூத்திர விலை 749.70 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.எனினும், அது சந்தையில் 382 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால், ஒவ்வொரு லிட்டர் ஒட்டோ டீசலுக்கும் 367.70 ரூபாய் நஷ்டத்தை கூட்டுத்தாபனம் சந்தித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.சுப்பர் டீசல் விற்பனையில் இந்த நஷ்டம் மேலும் அதிகரித்து, லிட்டருக்கு 397.07 ரூபாயாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, எவ்வித வரிகளும் விதிக்கப்படாத மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் இறக்குமதிச் செலவு 550.24 ரூபாயாகவும், அதன் சூத்திர விலை 580.53 ரூபாயாகவும் இருந்த போதிலும், அது நுகர்வோருக்கு 255 ரூபாய்க்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையிலும் 325.53 ரூபாய் நஷ்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டு வருவதாக வலுசக்தி அமைச்சின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement