• May 27 2026

குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்- அனுராதபுரத்தில் கொடூரம்!

Ziya / May 27th 2026, 3:19 pm
image

அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இக்கொடூரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-


நேற்று  இரவு, கொலையாளியான 45 வயதுடைய கணவன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே இருந்த குடும்பத் தகராறு தொடர்பில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.


இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த வாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளியான கணவன் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


தப்பியோடியுள்ள சந்தேகநபரான கணவனைக் கைது செய்வதற்காக நொச்சியாகமை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்- அனுராதபுரத்தில் கொடூரம் அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இக்கொடூரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-நேற்று  இரவு, கொலையாளியான 45 வயதுடைய கணவன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே இருந்த குடும்பத் தகராறு தொடர்பில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த வாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளியான கணவன் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.தப்பியோடியுள்ள சந்தேகநபரான கணவனைக் கைது செய்வதற்காக நொச்சியாகமை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement