• Jun 01 2026

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் தாமதம்!

shanu / Jun 1st 2026, 9:24 am
image


இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) வவுனியா சாலை ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமடைந்து வருவதன் காரணமாக, ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அசௌகரியமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.


மற்றும் வவுனியா இ.போ.ச சாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மே மாதச் சம்பளம் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி (26.05.2026) வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், வழக்கமான திகதி கடந்து பல நாட்கள் ஆகியும், இன்று வரை அவர்களுக்கான மே மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


அலுவலக ஊழியர்கள் மட்டுமன்றி, வீதிகளில் களமிறங்கிப் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் (காப்பாளர்கள்) மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பொறிவலர்கள் ஆகியோரும் இத்தகைய சம்பளத் தாமதப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.


இவர்களுக்கான ஏப்ரல் மாதச் சம்பளம் மே மாதம் 08 ஆம் திகதி (08.05.2026) வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், அதுவும் உரிய திகதியில் வழங்கப்படாது, சுமார் ஒரு வாரம் தாமதிக்கப்பட்டு மே 14 ஆம் திகதியே வழங்கப்பட்டுள்ளது.


தற்போது நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, தங்களது அடுத்த மாதச் சம்பளமும் தள்ளிப்போகுமோ என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பொறிவலர்களுக்கான மே மாதச் சம்பளம் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், சம்பளம் வழங்குவதில் ஏற்படும் இவ்வாறான தாமதங்கள் எங்களது அன்றாட வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிப்பதாக" தொழிலாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.


டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஜூன் 08 ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய வழமையான சம்பளக் கொடுப்பனவும் இழுத்தடிக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் தற்போது வவுனியா சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


எனவே, உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு தமக்கான சம்பளத்தை உரிய திகதியில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் தாமதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) வவுனியா சாலை ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமடைந்து வருவதன் காரணமாக, ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அசௌகரியமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.மற்றும் வவுனியா இ.போ.ச சாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மே மாதச் சம்பளம் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி (26.05.2026) வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், வழக்கமான திகதி கடந்து பல நாட்கள் ஆகியும், இன்று வரை அவர்களுக்கான மே மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அலுவலக ஊழியர்கள் மட்டுமன்றி, வீதிகளில் களமிறங்கிப் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் (காப்பாளர்கள்) மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பொறிவலர்கள் ஆகியோரும் இத்தகைய சம்பளத் தாமதப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.இவர்களுக்கான ஏப்ரல் மாதச் சம்பளம் மே மாதம் 08 ஆம் திகதி (08.05.2026) வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், அதுவும் உரிய திகதியில் வழங்கப்படாது, சுமார் ஒரு வாரம் தாமதிக்கப்பட்டு மே 14 ஆம் திகதியே வழங்கப்பட்டுள்ளது.தற்போது நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, தங்களது அடுத்த மாதச் சம்பளமும் தள்ளிப்போகுமோ என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பொறிவலர்களுக்கான மே மாதச் சம்பளம் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், சம்பளம் வழங்குவதில் ஏற்படும் இவ்வாறான தாமதங்கள் எங்களது அன்றாட வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிப்பதாக" தொழிலாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஜூன் 08 ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய வழமையான சம்பளக் கொடுப்பனவும் இழுத்தடிக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் தற்போது வவுனியா சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.எனவே, உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு தமக்கான சம்பளத்தை உரிய திகதியில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement