• Oct 13 2026

ராஜபக்ஷ குடும்பத்திற்கு இன்று முக்கியமான நாள்; நீதிமன்றங்களில் அடுத்தடுத்து முன்னிலை

Chithra / Oct 13th 2026, 10:22 am
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தொடர்பான வெவ்வேறு வழக்குகள் இன்று (13) நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்திற்கு இன்றைய நாள் முக்கியமானதாக அமைந்துள்ளது.


மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, மகன்களான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான வழக்குகளே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷ மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


'சிரிலிய சவிய' அமைப்புடன் தொடர்புடைய இந்த வழக்கில் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (12) கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மறுபுறம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.


சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று முற்பகல் சிறைச்சாலை பேருந்தில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.


க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் அவர் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு மகனான யோஷித ராஜபக்ஷவும் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.


கடற்படையில் இணைவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், அவர் கடற்படையில் இணைக்கப்பட்டு பிரித்தானியாவில் சிறப்புப் பயிற்சி பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே அவர் முன்னிலையாகியுள்ளார்.


குறித்த ஆட்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தொடர்பான வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் ஷிரந்தி ராஜபக்ஷவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்தப் பின்னணியில், குறிப்பாக ஷிரந்தி மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் விளக்கமறியல் தொடர்பில் நீதிமன்றங்கள் இன்று வழங்கவுள்ள உத்தரவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு இன்று முக்கியமான நாள்; நீதிமன்றங்களில் அடுத்தடுத்து முன்னிலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தொடர்பான வெவ்வேறு வழக்குகள் இன்று (13) நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்திற்கு இன்றைய நாள் முக்கியமானதாக அமைந்துள்ளது.மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, மகன்களான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான வழக்குகளே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷ மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.'சிரிலிய சவிய' அமைப்புடன் தொடர்புடைய இந்த வழக்கில் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (12) கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மறுபுறம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று முற்பகல் சிறைச்சாலை பேருந்தில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் அவர் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு மகனான யோஷித ராஜபக்ஷவும் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.கடற்படையில் இணைவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், அவர் கடற்படையில் இணைக்கப்பட்டு பிரித்தானியாவில் சிறப்புப் பயிற்சி பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே அவர் முன்னிலையாகியுள்ளார்.குறித்த ஆட்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தொடர்பான வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் ஷிரந்தி ராஜபக்ஷவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் பின்னணியில், குறிப்பாக ஷிரந்தி மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் விளக்கமறியல் தொடர்பில் நீதிமன்றங்கள் இன்று வழங்கவுள்ள உத்தரவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement