• Jun 04 2026

அரச வங்கியில் பட்டப்பகலில் மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை

ATM
Chithra / Jun 3rd 2026, 7:53 pm
image

ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 


இன்று பிற்பகல் (3) 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளை எடுத்துக்கொண்டு வங்கியின் பின்புறக்கதவு வழியாக உள்ளே சென்றபோது, ​​அங்கு வந்த நபர் ஒருவர் பணப்பைகளை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிய சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்வதற்காகவும், கொள்ளையிடப்பட்ட தொகையை மீட்பதற்காகவும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் பல விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


வங்கிக் கிளைக்கு அருகில் வைத்து, பணப் பைகளை (Money Bags) அச்சந்தேகநபர் மிகத் துணிகரமான முறையில் பறித்துக்கொண்டு தப்பியோடிய  தப்பியோடிய சம்பவம் தற்போது  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அரச வங்கியில் பட்டப்பகலில் மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் (3) 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளை எடுத்துக்கொண்டு வங்கியின் பின்புறக்கதவு வழியாக உள்ளே சென்றபோது, ​​அங்கு வந்த நபர் ஒருவர் பணப்பைகளை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிய சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்வதற்காகவும், கொள்ளையிடப்பட்ட தொகையை மீட்பதற்காகவும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் பல விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.வங்கிக் கிளைக்கு அருகில் வைத்து, பணப் பைகளை (Money Bags) அச்சந்தேகநபர் மிகத் துணிகரமான முறையில் பறித்துக்கொண்டு தப்பியோடிய  தப்பியோடிய சம்பவம் தற்போது  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement