• Jul 22 2026

தென்னிந்திய பிரபல கலைஞர்களுடன் ஆடிவேல் பக்தி இசை நிகழ்ச்சி பம்பலப்பிட்டியில்!

Chithra / Jul 22nd 2026, 1:08 pm
image


ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் தென்னிந்திய பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு பக்தி இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இந்த பக்தி இசை நிகழ்ச்சியில்,  சூப்பர் சிங்கர் புகழ் பின்னணி பாடகர் சாய் விக்னேஷ், சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா, சரிகமப வெற்றியாளர் சுசந்திகா மற்றும் லக்ஷனா, வர்ஜா ஆகியோர் பக்திப் பாடல்களை வழங்கவுள்ளனர்.


மேலும், இலங்கையின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான ரட்னம் ரட்னதுரையின் ரட்னம் & பேன்ட் இசை நிகழ்ச்சிக்கு இசை வழங்கவுள்ளது.


இந்த நிகழ்வை, நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் அறங்காவலர் சபை ஏற்பாடு செய்துள்ளது.


ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் ராஜேந்திரன் செட்டியார் (JP) தலைமையிலான அறங்காவலர் சபையினர், ஆடிவேல் விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பக்தி இசை நிகழ்ச்சியில் அனைத்து பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

தென்னிந்திய பிரபல கலைஞர்களுடன் ஆடிவேல் பக்தி இசை நிகழ்ச்சி பம்பலப்பிட்டியில் ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் தென்னிந்திய பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு பக்தி இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்த பக்தி இசை நிகழ்ச்சியில்,  சூப்பர் சிங்கர் புகழ் பின்னணி பாடகர் சாய் விக்னேஷ், சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா, சரிகமப வெற்றியாளர் சுசந்திகா மற்றும் லக்ஷனா, வர்ஜா ஆகியோர் பக்திப் பாடல்களை வழங்கவுள்ளனர்.மேலும், இலங்கையின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான ரட்னம் ரட்னதுரையின் ரட்னம் & பேன்ட் இசை நிகழ்ச்சிக்கு இசை வழங்கவுள்ளது.இந்த நிகழ்வை, நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் அறங்காவலர் சபை ஏற்பாடு செய்துள்ளது.ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் ராஜேந்திரன் செட்டியார் (JP) தலைமையிலான அறங்காவலர் சபையினர், ஆடிவேல் விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பக்தி இசை நிகழ்ச்சியில் அனைத்து பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement