தலவாக்கலை பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவர் தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 39 வயதுடைய நபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி, பல வாரங்களாகப் பாடசாலைக்குச் செல்லாததை அவதானித்த பாடசாலை அதிபர், மாணவியின் நிலைமை தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மாணவி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தலவாக்கலை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளார்.
அதிபர் வழங்கிய தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சிறுமி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகச் சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தையைக் கைது செய்த பொலிஸார், அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு வருகை தராத மாணவி தொடர்பில் அதிபர் காட்டிய அக்கறையும் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையும், சிறுமி எதிர்கொண்டதாகக் கூறப்படும் துஷ்பிரயோகச் சம்பவம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் திலகரத்ன, பெண் பொலிஸ் சார்ஜன்ட் மருதநாயகி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரதீபா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலைக்கு வராத மாணவி – அதிபரின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம் தலவாக்கலை பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவர் தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 39 வயதுடைய நபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி, பல வாரங்களாகப் பாடசாலைக்குச் செல்லாததை அவதானித்த பாடசாலை அதிபர், மாணவியின் நிலைமை தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.இதனையடுத்து, மாணவி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தலவாக்கலை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளார்.அதிபர் வழங்கிய தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சிறுமி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது, தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகச் சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தையைக் கைது செய்த பொலிஸார், அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாடசாலைக்கு வருகை தராத மாணவி தொடர்பில் அதிபர் காட்டிய அக்கறையும் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையும், சிறுமி எதிர்கொண்டதாகக் கூறப்படும் துஷ்பிரயோகச் சம்பவம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் திலகரத்ன, பெண் பொலிஸ் சார்ஜன்ட் மருதநாயகி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரதீபா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.