• Jul 18 2026

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - பறிபோன இளைஞனின் உயிர்!

shanu / Jul 18th 2026, 7:59 pm
image

மின்கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 


இந்த விபத்துச் சம்பவம்  தென்மராட்சி கொடிகாமம்  பொலீஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 


விபத்தில்  வடமராட்சி பருத்தித்துறை தும்பளை  பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். 


கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை  நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தையடுத்து மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 


அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - பறிபோன இளைஞனின் உயிர் மின்கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம்  தென்மராட்சி கொடிகாமம்  பொலீஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்தில்  வடமராட்சி பருத்தித்துறை தும்பளை  பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை  நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தையடுத்து மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement