• Jul 18 2026

வவுனியா பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

shanu / Jul 18th 2026, 7:56 pm
image

வவுனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான முன்ஆயத்தங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஆலய வளாகத்தில் நடைபெற்றது.


இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவானது எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 01.08.2026 அன்று கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.


இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கான பொதுமக்கள் வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.


இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன் ஆகியோருடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பொலிஸ் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு தத்தமது துறைகள் சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்துக் கலந்துரையாடினர்.


திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி, சிறப்பான முறையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து முன்னெடுக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் வவுனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான முன்ஆயத்தங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஆலய வளாகத்தில் நடைபெற்றது.இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவானது எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 01.08.2026 அன்று கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கான பொதுமக்கள் வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன் ஆகியோருடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பொலிஸ் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு தத்தமது துறைகள் சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்துக் கலந்துரையாடினர்.திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி, சிறப்பான முறையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து முன்னெடுக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement