மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது, அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து அவர் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் படல்கும்புரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன குடும்பஸ்தர் 3 நாள்களின் பின் சடலமாக மீட்பு மொனராகலையில் சம்பவம் மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேற்படி நபர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது, அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து அவர் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் படல்கும்புரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.