• Jul 19 2026

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க சிப்பாய்கள் பலி

Chithra / Jul 19th 2026, 12:17 pm
image


ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.


ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவர்களது மரணத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இத்தாக்குதல்களில் அமெரிக்க இராணுவ சேவையைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.


ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.


ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க சிப்பாய்கள் பலி ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவர்களது மரணத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.இத்தாக்குதல்களில் அமெரிக்க இராணுவ சேவையைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement