• Aug 14 2026

பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்த ‘ஸ்பைடர் வுமன்’ நீண்ட போராட்டத்துக்குப் பின் கைது

Chithra / Aug 14th 2026, 10:45 am
image


கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நீண்டகாலமாக பல்வேறு போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்படும் பெண் சந்தேகநபர், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸ் (76448) வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (13) வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.


சுமார் 40 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண் கணவனை இழந்த நிலையில், உறவினர்களின் உதவியுடன் நீண்டகாலமாக பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸார் வருவதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில், குறித்த பெண் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஏனைய மாடிகளுக்கு தாவிச் சென்று தப்பிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபரிடமிருந்து 2,310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுருக்கு பொறி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதேவேளை, குறித்த பெண் இதற்கு முன்னரும் இரு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், தொடர்ந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கல்முனை தலைமையக பொலிஸாருக்கு சவாலாக இருந்ததாகவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


குறித்த பகுதியில் மறைந்திருந்து பல்வேறு போதைப்பொருட்களை விநியோகிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்த ‘ஸ்பைடர் வுமன்’ நீண்ட போராட்டத்துக்குப் பின் கைது கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நீண்டகாலமாக பல்வேறு போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்படும் பெண் சந்தேகநபர், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸ் (76448) வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (13) வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.சுமார் 40 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண் கணவனை இழந்த நிலையில், உறவினர்களின் உதவியுடன் நீண்டகாலமாக பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் வருவதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில், குறித்த பெண் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஏனைய மாடிகளுக்கு தாவிச் சென்று தப்பிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபரிடமிருந்து 2,310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுருக்கு பொறி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இதேவேளை, குறித்த பெண் இதற்கு முன்னரும் இரு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், தொடர்ந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கல்முனை தலைமையக பொலிஸாருக்கு சவாலாக இருந்ததாகவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் மறைந்திருந்து பல்வேறு போதைப்பொருட்களை விநியோகிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement