• Aug 13 2026

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இயந்திரப் படகுகள் வழங்கி வைப்பு

Aathira / Aug 13th 2026, 12:39 pm
image

டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் W.G.M. ஹேமந்தகுமார தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம ஆகியோர் மீனவர்களுக்கு படகுகளை வழங்கி வைத்தனர்.

புயலால் தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு, இந்தப் படகுகள் மூலம் மீண்டும் கடற்றொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் துறைமுக அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இயந்திரப் படகுகள் வழங்கி வைப்பு டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்கான நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் W.G.M. ஹேமந்தகுமார தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம ஆகியோர் மீனவர்களுக்கு படகுகளை வழங்கி வைத்தனர்.புயலால் தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு, இந்தப் படகுகள் மூலம் மீண்டும் கடற்றொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் துறைமுக அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement