இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டினை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று (11) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த தற்போதைய அரசாங்கம், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கவில்லை என கூட்டணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள அரசைப் பாதுகாப்பதற்கான பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புச் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் (OCB) ஆகியவற்றால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாகச் சிறுபான்மை இன மக்களும் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தேச சட்டமூலங்கள் இத்தகைய போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தனிநபர்களைக் குறிவைத்து பரவலான கைதுகளை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கக்கூடும் எனவும் கூட்டணியினர் தமது கரிசனையை வெளிப்படுத்தினர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலாக ஆபத்தான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பது கவலைக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் கிழக்கு மாகாணத்தின் மாதவனை – மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காணி ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களால் தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், அதிகரித்த வரிச்சுமை மற்றும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் மட்டுமன்றி, ஏனைய மக்களும் வாழ்வாதார ரீதியாகப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூட்டணியின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் கனடா தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களின் போது, கனேடிய மக்களின் சார்பிலும், குறிப்பாகக் கனடாவில் வாழும் இலங்கையர்களின் பிரதிநிதியாகவும் தமது கரிசனைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் தொடர்பில் கனடா கவனமாக அவதானித்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் கனடையிலும் தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அத்தகைய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வந்தாலும், மனித உரிமைகளைப் பாதிக்கும் கடுமையான சட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள சட்டமூலங்கள் தொடர்பில் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கனடா தனது கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு கனடா தொடர்ந்து பங்களித்து வருவதாகவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலும், கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஊக்குவித்து, அதன் ஊடாகப் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் மற்றும் தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கனடா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் எனத் தெரிவித்ததையடுத்து சந்திப்பு நிறைவடைந்தது.
கனடா உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டினை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.குறித்த சந்திப்பு இன்று (11) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த தற்போதைய அரசாங்கம், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கவில்லை என கூட்டணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள அரசைப் பாதுகாப்பதற்கான பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புச் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் (OCB) ஆகியவற்றால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாகச் சிறுபான்மை இன மக்களும் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.குறிப்பாக, நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.இந்நிலையில், உத்தேச சட்டமூலங்கள் இத்தகைய போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தனிநபர்களைக் குறிவைத்து பரவலான கைதுகளை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கக்கூடும் எனவும் கூட்டணியினர் தமது கரிசனையை வெளிப்படுத்தினர்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலாக ஆபத்தான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பது கவலைக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் கிழக்கு மாகாணத்தின் மாதவனை – மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காணி ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களால் தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.மேலும், அதிகரித்த வரிச்சுமை மற்றும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் மட்டுமன்றி, ஏனைய மக்களும் வாழ்வாதார ரீதியாகப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூட்டணியின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் கனடா தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களின் போது, கனேடிய மக்களின் சார்பிலும், குறிப்பாகக் கனடாவில் வாழும் இலங்கையர்களின் பிரதிநிதியாகவும் தமது கரிசனைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் தொடர்பில் கனடா கவனமாக அவதானித்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் கனடையிலும் தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.அத்தகைய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வந்தாலும், மனித உரிமைகளைப் பாதிக்கும் கடுமையான சட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள சட்டமூலங்கள் தொடர்பில் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கனடா தனது கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு கனடா தொடர்ந்து பங்களித்து வருவதாகவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.மேலும், கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஊக்குவித்து, அதன் ஊடாகப் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.மனித உரிமைகள் மற்றும் தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கனடா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் எனத் தெரிவித்ததையடுத்து சந்திப்பு நிறைவடைந்தது.