• Nov 11 2026

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Chithra / Nov 11th 2026, 5:54 pm
image


நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மருதானை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம உள்ளிட்ட பகுதிகளின் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை உள்ளிட்ட பகுதிகளிலும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இதனால், குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் எச்சரிக்கையும், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.


இரண்டாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெஹியோவிட்ட, மாவனெல்லை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


அதேபோன்று, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை, நீல்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, எஹலியகொட, வெலிகேபொல மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அவதானிக்குமாறும், ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மருதானை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம உள்ளிட்ட பகுதிகளின் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை உள்ளிட்ட பகுதிகளிலும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் எச்சரிக்கையும், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.இரண்டாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெஹியோவிட்ட, மாவனெல்லை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.அதேபோன்று, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை, நீல்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, எஹலியகொட, வெலிகேபொல மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அவதானிக்குமாறும், ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement