நாட்டில் குற்றம் இழைத்தவர்கள்தான் புதிய சட்டமூலங்களைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் கே.டி. லால் காந்த, அத்தகைய குற்றவாளிகள் தற்போது எதிர்க்கட்சிகளிலேயே நிரம்பி வழிகின்றார்கள் என்றும் கடுமையாகச் சாடினார்.
அத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் - ஈடுபடுவோர் இனி எக்காலத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு மிக விரைவில் தகுந்த தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய அரசின் கீழ் நாட்டின் நீதித்துறையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் எவ்வாறான வெளிப்புறத் தலையீடுகளுமின்றி முற்றிலும் சுயாதீனமாகவே இயங்கி வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசு நீதித்துறையின் செயற்பாடுகளில் ஒருபோதும் தலையிடாது என்றும், சட்டத்தின் ஆட்சி தனது வழியில் உறுதியாகப் பயணிக்கும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
நாட்டின் அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரசு முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்குச் சில அரசியல் தரப்புகள் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகின்றன என்று குறிப்பிட்ட அவர், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டே புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
கடந்தகாலத் தவறுகளிலிருந்து நாட்டை மீட்டுச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசின் பிரயத்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தங்களது ஊழல்களை மறைக்க முற்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளில் உள்ள சில நபர்கள் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படலாம் என அஞ்சும் சட்டங்களைக் குறிப்பிட்டுப் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.
மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சட்டத்தை எவரும் தமது சுயலாபத்துக்காக வளைக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் கே.டீ.லால் காந்த, சுயாதீனமான நீதிமன்றங்களின் ஊடாக ஊழல்வாதிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் வரை அரசு பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அமைச்சர் லால் காந்த கடும் எச்சரிக்கை நாட்டில் குற்றம் இழைத்தவர்கள்தான் புதிய சட்டமூலங்களைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் கே.டி. லால் காந்த, அத்தகைய குற்றவாளிகள் தற்போது எதிர்க்கட்சிகளிலேயே நிரம்பி வழிகின்றார்கள் என்றும் கடுமையாகச் சாடினார்.அத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் - ஈடுபடுவோர் இனி எக்காலத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு மிக விரைவில் தகுந்த தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.தற்போதைய அரசின் கீழ் நாட்டின் நீதித்துறையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் எவ்வாறான வெளிப்புறத் தலையீடுகளுமின்றி முற்றிலும் சுயாதீனமாகவே இயங்கி வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசு நீதித்துறையின் செயற்பாடுகளில் ஒருபோதும் தலையிடாது என்றும், சட்டத்தின் ஆட்சி தனது வழியில் உறுதியாகப் பயணிக்கும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.நாட்டின் அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரசு முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்குச் சில அரசியல் தரப்புகள் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகின்றன என்று குறிப்பிட்ட அவர், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டே புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.கடந்தகாலத் தவறுகளிலிருந்து நாட்டை மீட்டுச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசின் பிரயத்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தங்களது ஊழல்களை மறைக்க முற்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.எதிர்க்கட்சிகளில் உள்ள சில நபர்கள் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படலாம் என அஞ்சும் சட்டங்களைக் குறிப்பிட்டுப் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.நாட்டின் சட்டத்தை எவரும் தமது சுயலாபத்துக்காக வளைக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் கே.டீ.லால் காந்த, சுயாதீனமான நீதிமன்றங்களின் ஊடாக ஊழல்வாதிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் வரை அரசு பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.