• Nov 14 2026

அர்ச்சனாவுக்கு எதிரான வழக்கில் இன்று என்ன நடந்தது? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Chithra / Nov 10th 2026, 1:06 pm
image


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக்குதல் தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


ஒருகொடவத்தை, பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் கார் விபத்து தொடர்பில், லசந்த அபேவர்தன என்பவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கே இன்று (10) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று நடைபெறவிருந்தன.


எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் இன்றைய விசாரணையில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்து, வழக்கை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.


இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், அந்தக் காலப்பகுதிகளைத் தவிர்த்து வேறு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.


இரு தரப்பினரதும் கோரிக்கைகளைப் பரிசீலித்த நீதவான், வழக்கின் சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


அர்ச்சனாவுக்கு எதிரான வழக்கில் இன்று என்ன நடந்தது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக்குதல் தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.ஒருகொடவத்தை, பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் கார் விபத்து தொடர்பில், லசந்த அபேவர்தன என்பவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கே இன்று (10) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று நடைபெறவிருந்தன.எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் இன்றைய விசாரணையில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்து, வழக்கை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், அந்தக் காலப்பகுதிகளைத் தவிர்த்து வேறு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.இரு தரப்பினரதும் கோரிக்கைகளைப் பரிசீலித்த நீதவான், வழக்கின் சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement