• Nov 14 2026

கிண்ணியாவில் 32 சாரதிகளிடம் போதைப்பொருள் பரிசோதனை – 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!

Ziya / Nov 13th 2026, 5:14 pm
image

கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின்போது, 7 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களைச் செலுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில், நேற்று (13) மாலை கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது மொத்தமாக 32 சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், நான்கு டிப்பர் வாகன சாரதிகள், இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என ஏழு பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திருகோணமலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக, திருகோணமலை வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவு மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன.


தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் சாரதிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்ட ஏழு சாரதிகளையும் எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி W.A.K. சுகத் சந்தான தெரிவித்தார்.

கிண்ணியாவில் 32 சாரதிகளிடம் போதைப்பொருள் பரிசோதனை – 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின்போது, 7 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களைச் செலுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில், நேற்று (13) மாலை கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது மொத்தமாக 32 சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், நான்கு டிப்பர் வாகன சாரதிகள், இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என ஏழு பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.திருகோணமலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக, திருகோணமலை வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவு மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன.தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் சாரதிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்ட ஏழு சாரதிகளையும் எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி W.A.K. சுகத் சந்தான தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement