• Nov 14 2026

போராட்டக் களத்தில் அடிதடி; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Chithra / Nov 13th 2026, 10:22 am
image



அனுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இடம்பெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், போராட்டத் தளத்தில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நால்வரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.


இதனையடுத்து, கஸ்ஸப்ப தேரர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள அனுராதபுரம் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டத் தளத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது ராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இறுதியில், கைது செய்யப்பட்ட நான்கு பிக்குகள் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போராட்டக் களத்தில் அடிதடி; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு அனுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இடம்பெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், போராட்டத் தளத்தில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நால்வரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.இதனையடுத்து, கஸ்ஸப்ப தேரர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள அனுராதபுரம் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டத் தளத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது ராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இறுதியில், கைது செய்யப்பட்ட நான்கு பிக்குகள் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement