• Nov 10 2026

ஏ9 வீதியில் அடுத்தடுத்து மோதிய மூன்று பேருந்துகள் – ஐந்து உயிர்கள் பலி, 50 பேர் காயம்

Chithra / Nov 10th 2026, 3:44 pm
image


அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று (10) காலை மூன்று பேருந்துகள் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.


இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இரண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது, குறித்த இரண்டு பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்து, அந்தப் பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.


இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும், காயமடைந்தவர்கள் அநுராதபுரம், வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

ஏ9 வீதியில் அடுத்தடுத்து மோதிய மூன்று பேருந்துகள் – ஐந்து உயிர்கள் பலி, 50 பேர் காயம் அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று (10) காலை மூன்று பேருந்துகள் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இரண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது, குறித்த இரண்டு பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்து, அந்தப் பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும், காயமடைந்தவர்கள் அநுராதபுரம், வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement